பேனாவால் சிக்கிய ரிஷி சுனக் - அதிர்ச்சியில் ஒட்டுமொத்த இங்கிலாந்து
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தான் பயன்படுத்தும் பேனாவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...
இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அரசு கோப்புகளில் கையெழுத்திடும் போது அழியும் வகையிலான மையைக் கொண்ட பேனாக்களைப் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ரிஷி சுனக் பிரதமராக இருக்கும் போதும் சரி... இதற்கு முன்னரும் சரி... 495 ரூபாய் மதிப்புள்ள Pilot V என்ற பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் வகையிலான பேனாவைப் பயன்படுத்தித் தான் அரசு ஆவணங்கள், சர்வதேச உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்ப கடிதங்கள் ஆகியவற்றில் கையொப்பமிட்டுள்ளார். மிக எளிதில் அழிக்கக் கூடிய வகையிலான இந்தப் பேனாவால் ரகசிய ஆவணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும் பிரதமர் ரிஷி சுனக் ஒருபோதும் தான் எழுதியதை திருத்தி எழுத இந்த பேனாவைப் பயன்படுத்தியதில்லை என இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது...பேனாவால் சிக்கிய ரிஷி சுனக் - அதிர்ச்சியில் ஒட்டுமொத்த இங்கிலாந்து | Rishi sunak