"பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குக" - இலங்கையில் உண்ணாவிரத போராட்டம்

x

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என இலங்கையின் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கொழும்பு ஹயிட் பார்க்கில் நடைபெற்ற போராட்டத்தில், அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் வசந்த முதலிகே, உறுப்பினர்களான ஸ்ரீ தம்ம தேரர் மற்றும் அஷான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதே போல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே, உண்ணாரவிரத போராட்டம் நடைப்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி. துரை ராச சிங்கம், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்