பொறுப்பில் இருந்தவர்களுக்கு மீண்டும் பதவி? - நிர்வாகிகளிடம் "கறார்" காட்டிய அமைச்சர் பொன்முடி DMK
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் - தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது புதிய நபர்களை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என திமுக தலைமை கூறியதாக சொல்லப்படும் நிலையில், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்து படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடியிடம் வழங்கியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அந்த படிவத்தை தூக்கி எரிந்து ஆவேசமாக பேசினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், புதிதாக மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என கூறி, நீர் மோர் பந்தலை மட்டும் திறந்து வைத்து விட்டு அமைச்சர் பொன்முடி அங்கிருந்து சென்றதால் நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது