பெரம்பலூர் அருகே வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து
பெரம்பலூர் அருகே மின்கசிவால் குளிர்சாதன பெட்டி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் தினகரன், சூர்யா தம்பதி, குரும்பலூர் கீழவீதியில் வருகின்றனர். நேற்று மாலை, வீட்டின் மேற்கூரையில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், மின்சாரத் துறைக்கும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதற்குள் குளிர்சாதனப் பெட்டி வெடித்து, அந்தப் பகுதியில் அதிக அளவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. மின்சாரத் துறை ஊழியர்கள் உடனடியாக மின்சார வினியோகத்தை நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டிற்குள் நுழைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்ததுடன் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின, விபத்தின் போது யாரும் வீட்டில் இல்லாததால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.