பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நடமாடும் எலிகள்... பைகள், மெத்தை விரிப்புகளை கடித்து நாசம் - ஊழியர்கள் அலட்சியம்.. பொதுமக்கள் கோரிக்கை

x
  • மோகனூர் சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் தினமும் 10-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன
  • . இந்த மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் பிரிவில் எலி தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
  • பிரசவம் முடிந்த பிறகு தாயும், பச்சிளம் குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பைகள், குழந்தைகளின் மெத்தை விரிப்புகள், தலையணை மற்றும் உணவு பொருட்களை எலிகள் கடித்து நாசம் செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
  • எலிகளின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
  • இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் பல முறை தெரிவித்தபோதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
  • எனவே, பச்சிளங்குழந்தைகள் வார்டில் உள்ள எலிகளை ஒழிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்