எலி கடித்த தர்பூசணியில் மக்களுக்கு ஜூஸ் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை நுங்கம்பாக்கத்தில் சுகாதாரமற்ற இடத்தில் விற்பனை செய்யபபட்ட ஒன்றரை டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நுங்கம்பாக்கத்தில் 20- க்கும் மேற்ப்பட்ட தர்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், பல தர்பூசணிகள் சுகாதாரமற்ற இடத்தில் வைத்துள்ளதாகவும், மேலும் எலி கடித்த தர்பூசணி கரப்பாம்பூச்சிகள் உள்ள தர்பூசணி உள்ளிட்ட பழங்களை ஜூஸ் போட்டு பொது மக்களுக்கு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை கண்ட உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வீனா தலைமையிலான அதிகாரிகள் ஒன்றரை டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அபராத தொகை விதித்த அதிகாரிகள் உடனடியாக, எச்சரிக்கை நோட்டீசும் அளித்துள்ளனர்.
Next Story