சீருடையுடன் மது அருந்திய துப்புரவு பணியாளர் - டாஸ்மாக் கடையில் ஆபாச பேச்சு - வைரலாகும் வீடியோ
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, பணி நேரத்தில் துப்புரவு பணியாளர் மது அருந்திவிட்டு, உயரதிகாரியிடம் தகாத வார்த்தைகளால் பேசும் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
வெண்ணந்தூர் பேரூராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக இருந்து வரும் பாலசுப்ரமணியம் மற்றும் மணி ஆகிய இருவர், கடந்த 5 ஆண்டுகளாக பணி நேரத்தில் பணிக்கு வராமல், கையெழுத்து போட்டுவிட்டு, டாஸ்மாக் பாரில் மது குடிப்பதாக புகார்கள் எழுந்தன.
மேலும், மதுபோதையில் சக பெண் ஊழியர்களை, பாலசுப்பிரமணியம் மற்றும் மணி இருவரும் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், சாதிய ரீதியாக பேசுவதாக பொய் புகார் அளித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளர், பணி நேரத்தில், சீருடையில் டாஸ்மாக் பாரில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து செயல் அலுவலர் கேட்டபோது, அவரை மிரட்டும் தொனியில் துப்புரவு பணியாளர் நடந்து கொண்டது வீடியோவில் பதிவாகியுள்ளது.