முகவரி கேட்பதுபோல் சிறுமியிடம் பாலியல் சீண்டல்... எதுவுமே நடக்காதது போல தப்பி சென்ற நபர் - பின்னாலே 2 கி.மீ. தூரம் விரட்டிச் சென்ற பெற்றோர்

x

வாலாஜாப்பேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், பள்ளமுள்ளுவாடி கிராமத்தில் உள்ள தனது நண்பரைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, எதிரில் சைக்கிளில் வந்த 13 வயது சிறுமியிடம் முகவரி கேட்பதுபோல், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால், சிறுமி கூச்சலிட்டதால் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றபோது, வாகனத்தின் பதிவு எண்ணை சிறுமி பதிவு செய்து கொண்டு, பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார்.

அந்த இளைஞர் மீது பெற்றோர் புகார் கொடுக்க சென்றபோது, அந்தப் பகுதியில் அந்த இளைஞரைக் கண்ட சிறுமி அடையாளம் காட்டினார். இதையறிந்த அந்த இளைஞர் அதிவேகமாக தனது இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

2 கிலோ மீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்