குழந்தைகளுக்கு மன வளர்ச்சி பாதிப்பு? - வேதனையில் தாய் செய்த படுபாதகம்... ஹாஸ்ப்பிட்டலில் போராடும் 3 உயிர்கள்
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு குழந்தைகளும் மன வளர்ச்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக கூறி, இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த தாய் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆற்காடு அருகே வேப்பூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை மற்றும் 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர்.
- இந்த இரு குழந்தைகளும் மனவளர்ச்சி குன்றி பாதிக்கப்பட்டதாகவும், இதனால் குழந்தைகளின் தாய் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
- இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த தாய், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இதையடுத்து, மூவரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மூவரும் சிகிச்சை பெறு வருகின்றனர்.
- இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story