ராகுல் காந்தி தகுதி நீக்கம் எதிரொலி.. 144 தடையை மீறிய காங்கிரஸ் தலைவர்கள் - சத்தியாகிரக போராட்டம்
ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட வாரியாக காந்தி சிலை முன்பு இன்று சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக டெல்லி ராஜ்காட் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பதாக, டெல்லி காவல்துறை அறிவித்தது. இதனிடையே தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான காங்கிரசார், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ராஜ்காட்டில் நடந்துவரும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.
Next Story