பவ்யமாக தூங்கிய நாய்க்குட்டிகள்.. உயிரை எடுக்க காத்திருந்த நல்ல பாம்பு - பாய்ந்து தட்டிவிட்ட இளைஞர்

x

கடலூர் மாவட்டம் பாலூர் கிராமத்தில் படமெடுத்து ஆடிய நல்லப்பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரை என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த நாய் ஆனது 3 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்நிலையில், நாய் குட்டிகள் இருந்த இடத்திற்கு சுமார் 4 அடி நீளம் கொண்ட நல்லப்பாம்பு வந்தது.

இதனை கண்ட தாய் நாய் குட்டிகளை காப்பாற்ற குரைத்தவாறு இருந்தது.

பின்னர், அதனை கண்ட அப்பகுதி மக்கள், பாம்பு ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த பாம்பு ஆர்வலர், நல்லப் பாம்பை லாவகமாக பிடித்ததுடன், நாய் குட்டிகளையும் பாதுகாப்பாக மீட்டார்.


Next Story

மேலும் செய்திகள்