தொகுதி பக்கமே செல்லாத பாஜக எம்.பி. - அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பொதுமக்கள்
- பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பி. சன்னி தியோலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகருக்கு பொதுமக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
- பிரபல நடிகரான சன்னி தியோல், 4 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
- மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவறிவிட்டதால், எம்.பி. பதவிக்கான உரிமையையும், அரசு ஊதியம், படிகளை பெறும் தகுதியையும் இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
- இதனால், அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதற்கு முன்பு சன்னி தியோலை கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள், காணவில்லை என போஸ்டர் ஒட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Next Story