பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு

x

புதுச்சேரியில், அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு லிட்டர் பால், 4 ரூபாய் உயர்த்தி 48 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இதேபோல், கொள்முதல் விலையும் லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி 34ல் இருந்து 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்