வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை .. LCU பாணியில் பயங்கரம் - சிக்கிய 6 கல்லூரி மாணவர்கள்

x

துக்க நிகழ்ச்சியின்போது தங்களுக்கு கொடுக்காமல் தனியாக வாணவெடி வெடித்தவரை, கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...


புதுச்சேரி, முதலியார் பேட்டையை சேர்ந்தவர் ராஜி. லாரி ஓட்டுனரான இவர் கடந்த 21 ஆம் தேதி தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது, மர்மகும்பலால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்....

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், 2 தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர்....

அப்போது, சம்பவத்தன்று, தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் ராஜி கலந்து கொண்டதும், அங்கு ராஜிக்கும் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது...

இதனடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், கிருமாபாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த நிர்மல், ஹரி, மோகன்ராஜ் உட்பட 6 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர்...

இதில், கல்லூரி மாணவர்கள் 6 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தபோது, மூவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற நிலையில், மூவரும் கீழே விழுந்து இடது கை எலும்பை முறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

உடனே, அவர்களை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்த நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன...


கைது செய்யப்பட்ட 6 கல்லூரி மாணவர்களும் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ரவுடிக்கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது...

இந்நிலையில், ராஜி கலந்து கொண்ட துக்க நிகழ்ச்சியில் நிர்மல், ஹரி மற்றும் சில கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது, அங்கு வானவெடி வெடித்து கொண்டிருந்த ராஜியிடம், தங்களுக்கும் பட்டாசுகளை தருமாறு மாணவர்கள் கேட்ட நிலையில், அதற்கு ராஜி தர மறுத்திருக்கிறார்...

இதனால் ஏற்பட்ட தகராறில், மாணவர்களை தாக்கிய ராஜி, அவர்களது குடும்பத்தினரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது...

இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அன்று மாலையே, தங்கள் பகுதியை சேர்ந்த... சிறு சிறு குற்றச்சம்பவங்கள் செய்தபோது பழக்கமான, லோகபிரகாஷ் என்பவரிடம் நடந்ததை எடுத்து கூறியுள்ளனர்...

இதில், லோகபிரகாஷ் நாட்டு வெடிகுண்டுகளை யூடியூப் பார்த்து தயாரித்து சிலருக்கு சப்ளை செய்து வந்த நிலையில், லோகபிரகாஷூடன் சேர்ந்து ராஜியை கொலை செய்ய கல்லூரி கல்லூரி மாணவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்...

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வைத்திருந்த லோகபிரகாஷ் உடன், நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்ற கல்லூரி மணவர்கள், அதை ராஜியின் மீது வீசி, அவரை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது...

இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த நிலையில், 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...

இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மகாலிங்கம் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையில், துக்க நிகழ்ச்சியில் யாருக்கும் தராமல் தனியாக வானவெடி வெடித்தவரை, கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்