"பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் 29ம் தேதி போராட்டம்"
சென்னையில் வரும் 29ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மலர்விழி, சிலிண்டர் விலை1,200 ரூபாயாக இருக்கும் நிலையில், அரசு வெறும் 460 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், மீதத் தொகையை தாங்கள் சுமக்க நேரிடுவுதாகவும் கூறினார்.
Next Story