"அந்நிய ஊடுருவலை எதிர்த்து போரிட்டவர் சத்ரபதி சிவாஜியின்" பிரதமர் புகழாரம்
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது ஆண்டு முடிசூட்டு விழா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். நாட்டு நலன், பொதுமக்கள் நலன் ஆகியவையே சத்ரபதி சிவாஜி நிர்வாகத்தின் அடிப்படை அம்சமாக திகழ்ந்ததாக பெருமிதம் தெரிவித்தார். 350 ஆண்டுகளுக்கு முன்பு முடிசூட்டு விழா நடைபெற்றபோது அதில் சுயராஜ்யமும் தேசியமும் இணைந்ததாக குறிப்பிட்டார். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சத்ரபதி சிவாஜி அதிகபட்ச முன்னுரிமை அளித்ததாக தெரிவித்த பிரதமர், ஒரே பாரதம், உன்னத பாரதம் சிந்தனை மூலம் அவரது சிந்தனைகளை காண முடியும் என தெரிவித்தார். நமது கலாச்சார மையங்களை தாக்கி நாட்டு மக்களின் மன உறுதியை குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதிலும், அந்நிய ஊடுருவலை எதிர்த்து போரிட்டவர் சத்ரபதி சிவாஜி என தெரிவித்துள்ளார்.
Next Story