"ஓம் நமசிவாய வணக்கம்" ஆதீனங்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

x

டெல்லியில் செங்கோல் வழங்குவதற்காக தம்மை சந்தித்த ஆதீனங்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி

தனிப்பட்ட முறையில் வந்து தம்மை ஆசீர்வதித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்திய விடுதலையின் போது ஆட்சி மாற்றத்திற்கான அடையாளம் குறித்து கேள்வி எழுந்த போது ராஜாஜி மற்றும் ஆதீனம் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் நமது பழமையான தமிழ் கலாச்சாரத்திடமிருந்து பெறப்பட்ட செங்கோல் மூலமாக அதிகாரம் மாற்றம் ஏற்பட்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

செங்கோல் பெறவேண்டிய அங்கீகாரத்தை தற்போது பெற்று கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் செங்கோலுக்கு கிடைக்க வேண்டிய உரிய மரியாதையும் கௌரவமான இடமும் கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் , ஆனால் ஆனந்த பவனத்தில் அது ஒரு கைத்தடியாக வைக்கப்பட்டிருந்தது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்திய விடுதலையின் போது தமிழ்நாட்டு மக்கள் அளித்த பங்களிப்பிற்கு முக்கியத்துவம் இதுவரை அளிக்கப்படாதது துரதிஷ்டவசமானது என்று கூறிய பிரதமர் மோடி ஓம் நமச்சிவாயா வணக்கம் என்று கூறி தமது பேச்சை நிறைவு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்