பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..கொந்தளித்த முத்தரசன்
மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து 25ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மதுரை சிம்மக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூர் இந்தியாவில் தான் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளதாகவும்,மத்திய அரசு இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இத்தகைய பெரிய சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்றும் தெரிவித்தார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், வரும் 25ம் தேதி நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் நடைபெறும் என்றும் எச்சரித்துள்ளார்.
Next Story