காணொளி மூலம் 45,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய பிரதமர் மோடி
அசாம் மாநிலத்தில், வேலை வாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் சுமார் 45,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி, பல்வேறு பணி நியமனங்களை குறித்த காலத்தில் மேற்கொள்ள முடியாத நிலை இருந்ததாக கூறினார். தற்போது அனைத்து நடைமுறையும் எளிமையாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டு காலம் சேவை காலம் என்ற முறையில் மிக முக்கியமானது என பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நிகழ்காலத்திற்கு ஏற்ப அரசு அமைப்புகள் தங்களை தாங்களே மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story