அரசியல் கட்சிகள் அதிகார மாற்றத்திற்கா? சமூக மாற்றத்திற்கா?". "திமுக ஆட்சியில் சமூக அநீதி தொடர்கிறது"

x

அரசியல் கட்சிகள் என்பது அதிகார மாற்றத்திற்காகவா? அல்லது சமூக மாற்றத்திற்காகவா? என இயக்குநர் பா. ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சேலம் அருகே பட்டியலின இளைஞர் கோயிலுக்குள் சென்றதற்காக திமுக ஒன்றிய செயலாளர் அந்த இளைஞரை தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நீதி கட்சி தொடங்கி இன்று வரை அரசியல் கட்சிகள் அதிகார மாற்றத்திற்காகவா அல்லது சமூக மாற்றத்திற்காகவா என கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சியில் சமூக அநீதி தொடர்வதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்