தொடர் தற்கொலை முயற்சி எதிரொலி - ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் சோதனை
தொடர் தற்கொலை முயற்சி எதிரொலியாக, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், கடுமையான சோதனைக்கு பிறகே பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெறும் குறைதீர் சிறப்பு முகாமில் கலந்துக் கொள்ளும் பொது மக்களில் சிலர், பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
இதன் எதிரொலியாக, ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை, போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
Next Story