"பாரம்பரிய தொழிலை விட்டு வெளியேறும் மக்கள்"- "இந்த நிலையை அப்படியே விட்டுவிட முடியாது..." பட்ஜெட் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு
- இன்றைய விஸ்வகர்மாக்களை, நாளைய தொழில் முனைவோராக உருவாக்குவதே அரசின் இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
- மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில், பி.எம். விஸ்வகர்மா கவுஷல் யோஜனா திட்டம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
- அப்போது, திறன் இந்தியா திட்டம் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் திறன்களை அரசு மேம்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
- விடுதலைக்குப் பின் கைவினை கலைஞர்களுக்கு அரசிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என தெரிவித்த பிரதமர், பலர் தங்களின் பழமையான மற்றும் பாரம்பரியமான தொழிலை விட்டு வெளியேறும் நிலையை அப்படியே விட்டுவிட முடியாது என்றார்.
- உள்ளூர் தொழில்களில் கைவினை கலைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர், இன்றைய விஸ்வகர்மாக்களை நாளைய தொழில் முனைவராக உருவாக்குவதே தங்களின் இலக்கு என தெரிவித்தார்.
Next Story