சூப்பர் மார்க்கெட்டில் திமுக பிரமுகரை சரமாரியாக தாக்கிய பாமக நிர்வாகி மகன் - சென்னையில் பரபரப்பு
சென்னையில் பல்பொருள் அங்காடியில் புகுந்து தி.மு.கவை சேர்ந்த ஒருவரை, பா.ம.க நிர்வாகியின் மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்துள்ள கொளப்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் தி.மு.க.வை சேர்ந்த ஜெயக்குமார். ஊனமாஞ்சேரி ஊராட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக இவருக்கும், பா.ம.கவை சேர்ந்த மகேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயக்குமார் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்ற மகேந்திரனின் முதல் மகன் சந்துரு, அங்கு பொருட்கள் வாங்குவதுபோல் சென்று, ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ஓட்டேரி காவல்நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
Next Story