இங்கிலாந்து மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு | king charles
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். பருவ நிலை செயல்பாடுகள், உயிரி பன்முகத்தன்மை, எரிசக்தி பரிமாற்றத்திற்கு நிதி உதவி என்பது உள்ளிட்ட பல விவகாரங்களை இருவரும் விவாதித்தனர். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தில் இந்தியாவிற்கான முன்னுரிமை குறித்தும் இங்கிலாந்து மன்னரிடம் பிரதமர் விவரித்தார். மேலும் காமன்வெல்த் நாடுகள் குறித்த இருவரும் தங்களுடைய பார்வையை பகிர்ந்து கொண்டதோடு அதன் செயல்பாடுகளை எப்படி மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள், இரு நாட்டுக்கும் இடையிலான உறவு பாலமாக திகழ்வதற்கும் இருவரும் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story