பிரதமருக்கு "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது .. ராணுவ மரியாதையுடன் PM மோடிக்கு வரவேற்பு - பிரதமரின் பட்டியலில் இணைந்த நாடுகள்
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு தன் பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்துக்கு கிளம்பினார்.அங்கு பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டின் அமைச்சர்களுடனான ஆலோசனை, இஸ்லாமிய மதத்தலைவருடனான சந்திப்பு, யோகா ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் என அடுத்தடுத்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார் பிரதமர் மோடி....
((breath 'ஆர்டர் ஆஃப் தி நைல்" வழங்கும் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ளவும்))
தொழில் ரீதியான ஒப்பந்தங்கள், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் என எகிப்தின் உறவினராக சென்றிருக்கும் பிரமருக்கு உயர்ந்த கௌரவம் ஒன்றை வழங்கியிருக்கிறது அந்த நாட்டின் அதிபர். உலக அளவில் புகழ்பெற்ற அரசியல் தலைவராக மாறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இதுவரை 13 விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆளுமை திறன், பன்முகத்தன்மை என அவரின் பல்வேறு நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தியது. அந்த வகையில் பிரதமருக்கு விருதுகள் கொடுத்த நாட்டின் பட்டியலில் தற்போது எகிப்தும் இணைந்துள்ளது.
((breath 'ஆர்டர் ஆஃப் தி நைல்" வழங்கும் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ளவும்))
எகிப்தின் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது 'ஆர்டர் ஆஃப் தி நைல்' என்னும் விருது. அதை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார் அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி...!
இந்த விருது முழுக்க முழுக்க எகிப்தின் வரலாற்று அடையாளங்களை தாங்கி நிற்கும் ஒரு விருதாகும். பெருமைக்குரிய அந்த விருதை இந்திய பிரதமருக்கு வழங்கியுள்ளனர். தங்க நிறத்தில் மின்னும் அந்த விருதில் எகிப்து நாட்டின் மூன்று முக்கியச்சின்னங்கள் இடம்பெற்றிருக்கும். முதல் சின்னம் தீமைகளுக்கு எதிராக, ஒரு நாட்டின் அரசை பாதுகாக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாவது சின்னம் நைல் நதியால் எகிப்து அடைந்த செல்வ செழிப்பை குறிப்பது. சகிப்புத்தன்மையை குறிக்கும் விதமாக மூன்றாவது சின்னம் அந்த விருதில் இடம்பெற்றிருக்கும்
இது மட்டுமில்லாமல் நீண்ட நைல் நதியை அடையாளப்படுத்தும் ஒரு சின்னமும், பூவை கொண்ட ஒரு சின்னமும் அதில் அடங்கியுள்ளது. ஆக மொத்தத்தில் எகிப்தின் வரலாற்று பெருமையாக கருதப்படும் அத்தனை அடையாளங்களையும், திரண்டிருக்கும் விருது ஒன்றை இந்திய பிரதமருக்கு வழங்கி பெருமை படுத்தியுள்ளது அந்த நாடு.