Plan Success - "இனி சாதாரணமான மக்களுக்கும் விண்வெளி செல்லலாம்"
மனிதர்கள் வணிக ரீதியாக விண்வெளி பயணம் மேற்கொள்ள முடியும் என விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சாதித்து காட்டியுள்ளது. இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான அந்நிறுவனம் முதல் வணிக ரீதியிலான விண்வெளி பயணமாக இத்தாலியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளை விண்ணுக்கு அனுப்பி வைத்தது. 2 விமானிகள் உள்ளிட்ட 5 பேருடன் விண்ணுக்கு சென்ற கேலக்டிக் 01 விமானம் 75 நிமிட விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இது வணிக ரீதியாக விண்வெளி பயணத்தில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது குறித்த அனுபவங்களை விமானியுடன் இத்தாலி விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
Next Story