மக்களே உஷார்! "அடையாள அட்டை வாங்கித்தருகிறேன்" பிரதமர் திட்டத்தின் மூலம் மோசடி
மதுரை பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்ரியர் அனீஸ் சேகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில், பிரதமரின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளை பெற்று தருவதாகக் கூறி 5 பேர் மோசடி செய்து வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய அனுமதியின்றி முறைகேடாக பணம் வசூல் செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.
Next Story