"பேனா சின்னம் குறித்து விசிக, கம்யூனிஸ்டுகள் ஏன் பேசவில்லை?" - செல்லூர் ராஜூ கேள்வி
- திமுகவை தமிழகத்தின் தீய சக்தி என்றும், அதை முடித்து வைக்கும் வல்லமை கொண்டவர் ஈபிஎஸ் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
- ஈரோடு அண்ணாமலை வீதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
- பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, பேனா நினைவு சின்னம் வைப்பது குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் திறக்கவில்லை என்றும், திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போல் உள்ளதாகவும் விமர்சித்தார்.
- நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுகவும், காங்கிரசும் தான் என்றும், வாதாடி கொண்டு வந்தது நளினி சிதம்பரம் என்றும் தெரிவித்தார்.
Next Story