பட்டப்பகலில் ஊராட்சி மன்றத் து.தலைவரின் கணவரைப் புரட்டி எடுத்த மணல் கடத்தல் கும்பல் - ஷாக் வீடியோ

x

கடலூரில் மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததாகக் கூறி ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் மற்றும் உறவினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.மருர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவி நிலாமதியின் கணவர் சேகருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது... இந்நிலையில், சத்தியமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து ஏ.மரூர் கிராமத்தின் அருகில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியுள்ளனர்... இது குறித்து வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது... மணல் கடத்தல் தகவலை சேகர் தான் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகக் கூறி, சத்தியமூர்த்தி, மற்றும் அவரது உறவினர்கள் சிலர், சேகரையும் அவரது உறவினர்களையும் தாக்கியுள்ளனர்... இதில் பலத்த காயம் அடைந்த சேகர் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சேகரின் மனைவி ஊராட்சி மன்ற துணைத் தலைவி நிலாமதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சத்தியமூர்த்தி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்