புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட முயற்சி மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு - தகராறில் ஒருவர் படுகாயம்

x

பல்லடம் அருகே மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி - கல்பனா தம்பதி .

பொள்ளாச்சியைச் சேர்ந்த திருமலைசாமி என்பவர் பழனிசாமி வீட்டிற்கு அருகேயுள்ள புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள மரங்களை வழி தடத்திற்காக திருமலைசாமி வெட்ட முயற்சி செய்து உள்ளார்.

அப்போது பழனிச்சாமிக்கும், திருமலை சாமி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் பழனிச்சாமி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்