"ஈரோட்டில் ஈபிஎஸ்-ஏ போட்டியிட்டாலும், ஓபிஎஸ் இல்லாமல் சின்னம் கிடைக்காது" - ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன்

ஈரோட்டில் ஈபிஎஸ்-ஏ போட்டியிட்டாலும், ஓபிஎஸ் இல்லாமல் சின்னம் கிடைக்காது - ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களத்தில் திடீர் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த தேர்தல் ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு பரீட்சையாக அமைந்துள்ளது. யார் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கும் நல்வாய்ப்பாகவும் உள்ளது. உள்ளபடியே திமுக ஆட்சி அமைந்த பின் முதல் இடைத்தேர்தல் என்பதால் அவர்களுக்கும் இது முக்கியமான தேர்தலே.

அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என நேற்றே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்று காலை காங்கிரசை எதிர்த்துக் களம் காணப்போவதாக அதிமுக மோதப் போவதாக அதன் கூட்டணி கட்சி தலைவரான ஜிகே வாசன் அறிவித்தார். ஈபிஎஸ் தரப்பு சார்பில் தான் வாசன் இதனை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அவர் ஓபிஎஸ்-ஐ கலந்தாலோசிக்கவில்லை. இச்சூழலில் ஓபிஎஸ்ஸின் எதிர்வினை என்ன மாதிரியாக இருக்கும் என அனைவருக்குமே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது தொடர்பாக அவரின் ஆதரவாளரான கண்ணன் விளக்கம் கொடுத்துள்ளார். அதனை காணலாம்.



Next Story

மேலும் செய்திகள்