தீர்ப்புக்கு பின் தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்

x

அதிமுக பொதுkகுழு தொடர்பான வழக்கில், கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என, உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுக்க உள்ளனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், தீர்மானங்கள் தொடர்பாக தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்றும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

எனவே அதிமுக சட்ட விதிகளில் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்