அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்.. பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் அறிவிப்பு

x

பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரும் என அந்த மாநில முதலமைச்சர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர் களுக்கு புதிய ஓய்வூதிய முறையைக் கொண்டுவருவது, இன்னும் பிரச்னையாக நீடித்துவருகிறது. தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தொடர் கோரிக்கையை தொடர்ந்து, ஜார்க்கண்ட், சத்திஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது மாநிலமாக, பஞ்சாப்பிலும் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகாரில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அறிவிக்கையும் அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தெரிவித் துள்ளார். பஞ்சாப்பில் இதன் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்