ஜப்பான் மீது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஜப்பான் மீது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி
வடகொரிய ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா-தென் ஆப்பிரிக்கா இணைந்து 4 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக செவ்வாய்க் கிழமை ஜப்பான் மீது வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதற்கு பதிலடியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்குக் கடலில் தென் கொரியாவும் அமெரிக்காவும் தலா 2 ஏவுகணைகளை ஏவியுள்ளன. மேலும் நேற்று தென்கொரிய மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் மஞ்சள் கடலில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story