ஜப்பான் மீது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா?.. ஜப்பானியர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
ஜப்பான் மீது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா?.. ஜப்பானியர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை பசிஃபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பாக ஜப்பான் பிராந்தியங்கள் மீது பறந்து சென்றதைப் போல் தோன்றியதால் அந்நாட்டு அரசு ஜப்பான் பொதுமக்களை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரித்தது. மேலும், வடக்கு ஜப்பான் பகுதிகளில் ரயில் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story