"பாலியல் தொழில் வேண்டாம்".. "உழைக்க கடை மட்டுமே போதும்.."- திருநங்கைகள் ஆட்சியரிடம் உருக்கம்
தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 220 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருநங்கைகள் தங்களுக்கு ஒரு கடை ஒதுக்கி தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 12 மாதங்களுக்கான வாடகை தொகையும், டெபாசிட் தொகையும் சேர்த்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான டிடியும் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்து விட்டதாக திருநங்கைகள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் இது வரை கடை ஒதுக்கப்படவில்லை எனவும் முறையான பதிலும் அளிக்கவில்லை எனக் கூறும் அவர்கள், பாலியல் தொழில் செய்யாமல், பிச்சை எடுக்காமல் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என நினைத்த தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story