"இனி தனியார் கல்லூரிகளுக்கு நேரடியாக ஃபீஸ் கட்ட வேண்டாம்" - மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவிப்பு
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, இந்த ஆண்டு முதல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கல்வி கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களை, கல்லூரிக்கு நேரடியாக செலுத்த தேவையில்லை என்றார். அந்த கட்டணங்களை மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடம் செலுத்தினால் போதும் என தெரிவித்தார். அதன் பிறகு அந்த கட்டணங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு தமிழக அரசு திருப்பி செலுத்தும் என்றும் கூறினார். இந்த புதிய நடைமுறை மூலம் பெற்றோரிடம் இருந்து, அதிக கட்டணங்கள் வசூலிப்பது தடுக்கப்படும் என்ற தகவலையும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Next Story