இன்றைய தலைப்பு செய்திகள் (25-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில், அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்...மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம்...ஆவின் உடன் தாங்கள் போட்டியிடவில்லை என அமுல் நிர்வாகம் விளக்கம்...
நாடாளுமன்ற புதிய கட்டடத்தில், தமிழ்நாட்டின் 20 ஆதீனங்களை வரவழைத்து செங்கோல் நிறுவப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி...குடியரசுத் தலைவரின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று காட்டம்...திறப்பு விழாவை திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில், அதிமுக உள்ளிட்ட 15 கட்சிகள் பங்கேற்பதாக தகவல்...
சிங்கப்பூர் பயணத்தை முடித்து விட்டு ஜப்பான் நாட்டுக்கு இன்று சென்றடைந்தார், முதலமைச்சர் ஸ்டாலின்...ஜப்பானின் இந்தியத் தூதர் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்...
மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நாள் மதிய உணவு வழங்கப்படும்...ஏழை, எளிய மக்கள் பயன்பெறவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கம் என்றும் விஜய் மக்கள் இயக்கம் இன்று அறிவிப்பு...
உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவுகள் நீக்கப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் இன்று விளக்கம்...அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில், பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு...
தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி என பிரதமர் மோடி பெருமிதம்...இந்தியா என்ன நினைக்கிறது என்பதை அறிய உலக நாடுகள் ஆவலாக இருப்பதாகவும் டெல்லியில் இன்று பேச்சு...