"லேசான மழைக்கே சிதைந்த புதிய பள்ளிக்கட்டிடம்" - பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டம் மானாம துரை அருகே, பள்ளிக்கட்டிடம் தரமற்ற வகையில் கட்டப்பட்டதால், 2 நாள் மழைக்கே தாக்குப்பிடிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டி தரக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் நிதி ஒதுக்கி, பள்ளிக்கட்டடம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தரமற்ற செங்கல் மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வகுப்பறை கட்டிடம் கட்டியதால், லேசான மழைக்கே சிதைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
https://youtu.be/XgC81hCAJ9Y
Next Story