உயிருடன் இருந்த சிசுவை இறந்ததாக கூறி உடலை அட்டையில் வைத்து தந்த கொடூரம் - கொதிக்கும் தாய்

x
  • டெல்லியில் உயிருடன் இருந்த சிசுவை இறந்துவிட்டதாக கூறி, அட்டைப்பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட விவகாரத்தில், இதுதான் உலகத்தரம் வாய்ந்த சுகாதார மாதிரியா என பாஜக விமர்சித்துள்ளது.
  • டெல்லி எல்.என்.ஜி.பி. அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் சிசு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து, உறவினர்களிடம் கொடுத்துள்ளனர்.
  • அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்த‌தால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அதை திறந்து பார்த்தபோது சிசு மூச்சு விடுவதை பார்த்துள்ளனர்.
  • இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • அதே நேரத்தில், 23 வாரத்தில் சிசு பிறந்த‌தாகவும், உயிருடன் இருப்பது தெரிந்த‌ உடன் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • அதே நேரத்தில், அட்டைப் பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்டதையும், இறந்துவிட்டதாக கூறியதையும் பாஜக விமர்சித்துள்ளது.
  • இதுதான் உலகத்தரம் வாய்ந்த சுகாதார மாதிரி என பெருமை பேசுவதா? என்று பாஜக விமர்சித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்