ஒரே பெண்ணை காதலித்த இரண்டு பேர்... கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பயங்கரம்... சிறுவன் கொடுத்த துப்பு... வெளி வந்த ஷாக் தகவல்...

x

நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.

பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி குலசேகரபட்டினம் தசரா விழாவிற்காக சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மெற்றொரு வழக்கு தொடர்பாக அப்பகுதியில் உள்ள ஒரு சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சந்தேகம் அடைந்து, கல்லூரி மாணவன் காணாமல் போன வழக்கு குறித்து விசாரித்துள்ளனர்.

இதில், அச்சிறுவன் தனது 2 நண்பர்களுடன் இணைந்து ராஜேந்திரனை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், வழக்கின் முதல் எதிரியும் ஒரே பெண்ணை காதலித்ததாகவும் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மூவரையும் கைது செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்