காவல் நிலையம் அருகிலேயே... திடீரென மாயமான பயணிகள் நிழற்குடை

x

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் இருந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை, குப்பை கொட்டப்படும் இடத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அருகே, ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

இந்த நிழற்குடையை அகற்றிய அடையாளம் தெரியாத நபர்கள், குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் வீசிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நிழற்குடையை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்