வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள்... போலீசார் விசாரணை

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி கொள்ளைடியக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அடுத்த வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர், குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பெங்களூரில் வசிக்கும் தனது மகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பீரோவை சோதனை செய்து பார்த்ததில், அதில் இருந்த 70 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்