"எனது மனைவி கல்லூரிக்கு செல்லவில்லை" - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

x

சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் உயர்கல்வி திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பீகாரில் இருந்து தமிழகம் வந்துள்ள 100 - க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பழமையான மொழி என்றால் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகும். இது எது மூத்த மொழி என்பது கேள்வி குறி என சூசகமாக கூறியுள்ளார். தொடர்ந்து திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமது திருமணம் குழந்தை திருமணம் என்றும், மனைவி கல்லூரிக்கு செல்லவில்லை ஆனால் பக்க பலமாக இருப்பவர் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்