"ஊருக்கே RIP போட்ட ட்விட்டருக்கு RIP போட வைத்த மஸ்க்" - மூடுவிழா காண்கிறதா ட்விட்டர்..?

x

எத்தனையோ பேருக்கு இரங்கல் குறிப்புகள் எழுதப்பட்டு வரும் ட்விட்டர் தளத்தில், அதற்கே இரங்கல் குறிப்பு எழுதி அட்டகாசம் செய்துவருகிறார்கள், வலைவாசிகள்.

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த 4ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே, ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார். சர்ச்சைக்குப் பேர்போன எலான் மஸ்க், ட்விட்டரில் செய்துவரும் அதிரடிகளை அதன் தலைமை அதிகாரிகள் முதல் ஊழியர்கள்வரை விமர்சனம் செய்துவருகின்றனர்.

ஊழியர்கள் வேலை நீக்கம் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் பல்வேறு பிரிவுகளின் தலைமை அதிகாரிகள் தாங்களாக பதவி விலகி வருகின்றனர். அமெரிக்க சட்டத்தையும் மீறியபடியாக கடும் சோதனைக்குத் தயாராகுமாறு வேண்டுகோள் விடுத்தார், மஸ்க். அதையடுத்து, ட்விட்டரிலிருந்து ஊழியர்கள் மளமளவென வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில், ட்விட்டர் விரைவில் மூடுவிழா கண்டுவிடும் என ட்விட்டர் ஊழியர்களும், பயனாளர்களும் கேலி கிண்டலாக அதே ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கல்லறையில் ட்விட்டருக்கு இரங்கல் தெரிவிக்கக் கூடியதைப் போன்ற படங்களைப் பதிவிட்டு, உச்சகட்ட அட்டகாசம் செய்கிறார்கள், மஸ்க் எதிர்ப்பாளர்கள்.


Next Story

மேலும் செய்திகள்