மக்கர் செய்த மலை ரயில்... இன்ஜின் கோளாறால் தவித்த சுற்றுலாவாசிகள்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது.
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக 10:40 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தது.
குன்னூரிலிருந்து ஊட்டிக்கு காலை 11 மணிக்கு, ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
Next Story