பட்டுப்புடவை,பித்தளை பாத்திரங்கள்,139 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை சேலத்தை கலக்கிய தாய் மாமன்

x

மேட்டூர் அருகே, மஞ்சள் நீராட்டு விழாவிற்காக பெண்ணின் தாய் மாமன் லாரியில் சீர்வரிசை கொண்டுவந்த சம்பவம் கவனம் ஈர்த்தது. சேலம் மாவட்டம் கோனூரை சேர்ந்த செல்வகுமார் - ஸ்ரீதேவி தம்பதியின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக அவரது தாய் மாமன் பட்டுப்புடவை, பித்தளை பாத்திரங்கள், பலகாரங்கள், பூக்கள், பழங்கள் என 139 தட்டுகளில் சீர்வரிசை கொண்டு வந்தார். சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு லாரியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட சீர்வரிசை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்