தோப்பில் சடலமாக கிடந்த தாய், தந்தை, மகள்... விசாரணையில் வெளிவந்த தகவல்

x
  • தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
  • சங்கரன்கோவில் அருகே தேவிபட்டிணம் கிராமத்தை சேர்ந்த ராமணன் என்பவர், மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தனது தென்னந்தோப்பில், மனைவி கமலம் மற்றும் மகள் நாகஜோதி ஆகியோருடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
  • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
  • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்