தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (23.01.2023)

தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (23.01.2023)
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தனது இளைய மகன் நிற்க வேண்டும் என விரும்பியதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி..

தம்மை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ் கட்சி தலைமையின் முடிவை ஏற்பதாகவும் கருத்து..


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, 12 அமைச்சர்கள் உள்பட 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது திமுக.

அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்..

இரட்டை இலை சின்னம் நூறு சதவீதம் ஈபிஎஸ் தரப்புக்கு கிடைக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை...

28 ஆம் தேதிக்குள் சாதகமாக தீர்ப்பு வரும் என உறுதி..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக போட்டியிடுமா...?

கட்சி நிர்வாகிகளோடு இரண்டு கட்சிகளும் இன்று ஆலோசனை...


சென்னை நுங்கம்பாக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சாலையில் ரோந்து வாகனத்தை ஓட்டிய காவலருக்கு 500 ரூபாய் அபராதம்.....

டுவிட்டரில் ஒருவர் புகைப்படத்துடன் பதிவு செய்து புகார் அளித்திருந்த ​நிலையில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை.........


ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி..

பரபரப்பாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது இந்தியா..


பழனி கும்பாபிஷேக விழாவையொட்டி, விமரிசையாக நடைபெற்று வரும் கலாகர்சன வைபவம்...

89 உப சன்னதிகளில் கும்பாபிஷேக புனித நீர் பூஜிக்கப்பட்டு, யாகசாலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்