அமெரிக்கா சென்றதும் முதல் பேட்டி அளித்த மோடி | Pm Modi
இந்தியாவின் உச்சபட்ச முன்னுரிமை அமைதி என்பதில் உலக நாடுகள் முழு நம்பிக்கை கொண்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்றார்.
தூதரக அளவில் மற்றும் பேச்சுவார்த்தை வழியே விவாதங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், போரை கொண்டு அல்ல என பிரதமர் மோடி குறிப்பிட்டார். சிலர், நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என கூறுவதாகவும், ஆனால் தாங்கள் நடுநிலைமையுடன் செயல்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவின் உச்சபட்ச முன்னுரிமை அமைதி என்பதில் உலக நாடுகள் முழு நம்பிக்கை கொண்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.